Images
  • fire
    (படம்:Bernama)

மலேசியாவில் தீயிலிருந்து 3 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை மரணம்

மலேசியாவின் திரங்கானு மாநிலத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில், 3 வயது மகனைக் காப்பாற்றும் முயற்சியில் தந்தை மாண்டார்.

45 வயது அஹமது ஃபாக்ருராஸி ஷாஃபி, தமது தரைவீட்டுக்கு வெளியே சுயநினைவின்றிக் கிடந்ததாகச் சம்பவ இடத்துக்கு முதலில் சென்ற உறவினர் ஒருவர் கூறினார்.

மகன் முஹம்மது அக்கில் ஹரித் தந்தையின் மார்பில் அமர்ந்திருந்ததாகவும் கூறப்பட்டது.

புகையைச் சுவாசித்ததால் அஹமது மாண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நான்கு குழந்தைகளில் ஆக இளையவர் அக்கில். 

தீப்பற்றியபோது கர்ப்பிணியான மனைவியும் எஞ்சிய மூன்று பிள்ளைகளும் வீட்டில் இல்லை.

அம்னோ கட்சிக் கிளையின் துணைத் தலைவரான அஹமது தீப்பிடித்த வீட்டிலிருந்து மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்து மயங்கிவிழுந்ததாக அவரின் தாயார் கூறினார்.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 18 தீயணைப்பாளர்கள் 10 நிமிடம் போராடினர்.

எதனால் வீட்டில் தீப்பற்றியது என்பது தெரியவில்லை.
 

உங்கள் கருத்து

Top