Images
மலேசியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 3,309 பேருக்குக் கிருமித்தொற்று
மலேசியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு, நேற்றுப் புதிதாக 3,309 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு 141,000-க்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
500-க்கும் அதிகமானோர் மாண்டனர்.
இந்நிலையில், மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்.
கிருமிப்பரவல் சூழலுக்கு ஏற்ப, ஆகஸ்ட் முதல் தேதி வரை அல்லது அதற்கு முன்னர் வரை நெருக்கடி நிலை நீடிக்கும்.
விரைவில் கிருமிப்பரவல் தணியும் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று மலேசியப் பிரதமர் முஹிதின் யாசின் கூறினார்.
நெருக்கடி நிலையின்போது பொதுச் சேவைத்துறை வழக்கம்போல் செயல்படும்.
எல்லை மீறுவோரைக் கைதுசெய்ய ராணுவம், காவல்துறை, குடிநுழைவுத்துறை ஆகியவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.