Images
  • Malaysia Travel Ban
    (படம்: Mohd RASFAN / AFP)

மலேசியாவில் 19ஆவது நபருக்கு COVID-19 கிருமித்தொற்று

மலேசியாவில் 39 வயதுப் பெண்ணுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

அந்தப் பெண், வூஹானைச் சேர்ந்த நால்வருடன் மலேசியா வந்திறங்கியவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கு மொத்தம் 19 பேருக்குக் கிருமி தொற்றியிருக்கிறது.

ஏற்கனவே நோய் தொற்றிய இருவருடன் இவருக்குத் தொடர்பிருப்பதாய்க் கூறப்பட்டது.

நேற்று நோய் அறிகுறிகள் தோன்றியதாகவும், பின் கோலா லம்பூரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசியாவில் இதுவரை மூவருக்கு நோய் குணமடைந்திருப்பதாய் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.
 

Top