Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காப்பிக் கடை பானங்களின் விலை உயர்வால் மலேசியர்கள் கடுப்பு

மலேசியாவில் காப்பிக் கடையில் காப்பிக்கு 3 ரிங்கிட்

வாசிப்புநேரம் -
காப்பிக் கடை பானங்களின் விலை உயர்வால் மலேசியர்கள் கடுப்பு

(படம்: New Straits Times)

மலேசியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலைவிட காப்பிக் கடையில் விற்கப்படும் பானங்களின் விலை அதிகமாக உள்ளது குறித்து உள்ளூர்வாசிகள் முணுமுணுத்து வருகின்றனர்.

காப்பிக் கடைகளில் மைலோ (Milo), காப்பி போன்ற பானங்களை உள்ளூர்வாசிகள் வாங்கி அருந்துவது வழக்கம்.

பெரும்பாலான இடங்களில் அவற்றின் விலை 3 ரிங்கிட்டாக ($1.01 சிங்கப்பூர் வெள்ளி) உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பானங்களின் விலை ஒவ்வொரு முறையும் 10 காசு உயர்ந்து வந்துள்ளதாகச் சிலர் கூறினர்.

விழாக்காலத்தின்போது அவற்றின் விலை அதிகரித்து அதன் பின்னர் குறையவே இல்லை என்றும் சிலர் கூறினர்.

ஒரு குவளை மைலோவிற்கு வாடிக்கையாளர்கள் 2.5 ரிங்கிட் முதல் 3 ரிங்கிட் வரை கொடுக்கவேண்டியிருப்பதாக, காப்பிக் கடைகளை நிர்வகிக்கும் மலேசிய முஸ்லிம் உணவகச் சங்கம் கூறியது.

பெட்ரோலின் வகையைப் பொறுத்து ஒரு லிட்டருக்கு அதன் விலை 2 முதல் 3 ரிங்கிட் வரை உள்ளது.

எனினும், மைலோ தூள், பனிக்கட்டி, கெட்டிப்பால் என்று பானங்களைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதனால், காப்பிக் கடைகளில் விற்கப்படும் பானங்களின் விலை உயர்ந்திருக்கக்கூடும் என்றார், சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. நூருல் ஹசான். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்