Images
  • Malaysian COVID
    (படம்: AFP/Mohd Rasfan)

மலேசியா: மேலும் 172 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று; மேலும் 4 பேர் மரணம்

மலேசியாவில் மேலும் நால்வர் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கு மாண்டோர் எண்ணிக்கை 20க்கு உயர்ந்துள்ளது.

172 பேர் கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 1,796க்கு அதிகரித்தது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 71 பேர் ஸ்ரீ பெடாலிங் (Sri Petaling) வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசலுடன் தொடர்புடையவர்கள்.

கிருமித்தொற்றுக்குப் பலியான 20ஆம் நபரும் அதே வட்டாரத்தின் பள்ளிவாசலுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.

கிருமித்தொற்றுக்குப் பலியான அவருக்கு வயது 76.

பாதிக்கப்பட்டவர்களில் இதர 101 பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது குறித்த விசாரணைகள் நடைபெறுகின்றன.

அவர்களில் 73 பேர் மருத்துவ ஊழியர்கள்.

இருப்பினும், சிகிச்சை பெற்ற நோயாளிகளிடமிருந்து அவர்களுக்கு நோய் பரவவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Top