Images
  • msia
    படம்: AFP / Mohd RASFAN

மலேசியா: கிருமித்தொற்றால் ஒரே நாளில் 207 பேர் மரணம்

மலேசியாவில், ஒரே நாளில் 207 பேர் கிருமித்தொற்றால் மாண்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் பதிவான மாண்டோர் எண்ணிக்கையில் அதுவே ஆக அதிகம் எனச் சுகாதார அமைச்சு அதன் Twitter பக்கத்தில் தெரிவித்தது.

கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து மலேசியாவில் மாண்டோர் எண்ணிக்கை 8,201 ஆனது.

மலேசியாவில், 24 மணி நேர இடைவெளியில் இன்று, 14,516 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

மலேசியாவில் இதுவரை 1,027,954 பேர் கிருமித்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

- MALAY MAIL  

Top