Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'COVID-19 பரவலைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்' - மலேசியச் சுகாதார அமைச்சர்

மலேசியாவில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் தொடர்ந்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் (Khairy Jamaluddin) அறிவுறுத்தியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் தொடர்ந்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் (Khairy Jamaluddin) அறிவுறுத்தியிருக்கிறார்.

அங்கு நோய்ப்பரவல் நிலவரம் மேம்பட்டு வந்தாலும் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,000க்கும் குறைவானோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

இருப்பினும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பதால், கவலை எழுந்துள்ளது.

40 வயதுக்கு மேற்பட்டோர் booster எனும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அறிவுறத்தப்பட்டது.

COVID-19 நோயை நிரந்தர நோயாகக் கையாளும் கட்டத்துக்குச் செல்ல, மலேசியாவுக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதாகத் திரு. ஜமாலுடின் எச்சரித்தார்.

நாட்டில் மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வராது என்று மலேசிய அரசாங்கம் குறிப்பிட்டது.

ஆனால் மருத்துவமனைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டால், கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்