Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: மலேசியாவில் 9ஆவது நாளாக 10,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 199 பேர் கிருமித்தொற்றால் மாண்டதாக, அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
COVID-19: மலேசியாவில் 9ஆவது நாளாக 10,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

படம்: Bernama

மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 199 பேர் கிருமித்தொற்றால் மாண்டதாக, அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று தொடங்கியதிலிருந்து அதுவே ஆக அதிகமான எண்ணிக்கை என்பதை, அமைச்சு சுட்டியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 927 பேர் இருப்பதாகவும், 459 பேருக்கு உயிர்வாயு அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

நேற்று ஒரே நாளில் 11,985 பேரிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

கடந்த 9 நாள்களாக அங்கு, தினமும் 10,700க்கு மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக, மலேசியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்