Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் நோய்த்தொற்று - இன்று 3,377 பேருக்குப் பாதிப்பு, 15 பேர் மரணம்

மலேசியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் நோய்த்தொற்று - இன்று 3,377 பேருக்குப் பாதிப்பு, 15 பேர் மரணம்

வாசிப்புநேரம் -

மலேசியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்று புதிதாக 3,377 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் புதிதாக 1,036 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

கோலாலம்பூரில் 257 பேருக்கும், ஜொகூர் பாருவில் 460 பேருக்கும், சபா மாநிலத்தில் 389 பேருக்கும் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

இன்று மேலும் 15 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

அங்கு மாண்டோர் எண்ணிக்கை 578-க்கு உயர்ந்துள்ளது.

தற்போது மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 147,855 ஆக உள்ளது.

மலேசியாவில் நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பெரும்பாலான பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலேசிய மாமன்னர் ஆகஸ்ட் மாதம் வரை நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்