Images
  • mco malaysia
    (படம்: REUTERS/Lim Huey Teng)

மலேசியாவின் சிலாங்கூர் குடிநுழைவுத்துறைத் தடுப்பு நிலையம் கிருமித்தொற்று இடமாக அறிவிப்பு

மலேசியாவில் இன்று புதிதாக 48 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து அங்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,185 ஆனது.

புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் நால்வர் வெளிநாட்டிலிருந்து மலேசியா திரும்பியவர்கள்.

25 பேர் வெளிநாட்டினர். அவர்களில் 21 பேர் சிலாங்கூரில் உள்ள குடிநுழைவுத்துறைத் தடுப்பு நிலையத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த நிலையம், கிருமி தொற்றும் அபாயம் மிக்க புதிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் மேலும் 53 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 5,900-க்கும் அதிகமானோர் முழுமையாய்க் குணமடைந்ததாக மலேசியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
 

Top