Images
  • malaysia covid
    படம்: AP Images

COVID-19: மலேசியாவில் மேலும் 172 பேருக்குக் கிருமித்தொற்று - மாண்டோர் எண்ணிக்கை 19ஆனது

மலேசியாவில் இன்று புதிதாக 172 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அங்கு இதுவரை 1,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இன்று மேலும் மூன்று பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். அதைத்தொடர்ந்து மாண்டோர் எண்ணிக்கை மலேசியாவில் 19க்கு அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 71 பேர் Sri Petaling பள்ளிவாசலுடன் தொடர்புடையவர்கள்.

மேலும் 101 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறினர்.

மலேசியாவில் இதுவரை 199 பேர் குணமடைந்துள்ளனர். 45 பேர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.




Top