Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: வங்கிக் கடன்களைக் மேலும் 3 மாதங்கள் காலந்தாழ்த்திச் செலுத்த அனுமதி

மலேசிய அரசாங்கம், வங்கிக் கடன்களைக் காலந்தாழ்த்திச் செலுத்துவதற்கான வரம்பை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா: வங்கிக் கடன்களைக் மேலும் 3 மாதங்கள் காலந்தாழ்த்திச் செலுத்த அனுமதி

(கோப்புப்படம்: Bernama)

மலேசிய அரசாங்கம், வங்கிக் கடன்களைக் காலந்தாழ்த்திச் செலுத்துவதற்கான வரம்பை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

பிரதமர் முஹிதீன் யாசின் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதனைத் தெரிவித்தார்.

கிருமிப் பரவல் சூழலில் வேலை இழந்தோருக்கும், சம்பளக் குறைப்புக்கு ஆளானோருக்கும் அது பொருந்தும்.

3 மாதங்களுக்குப் பிறகு, வங்கிகள் விரும்பினால் அதனை நீட்டிக்கலாம். தனிநபர்களின் நிலைமைக்கேற்ப வங்கிகள் அதனை முடிவுசெய்யும்.

ஊதியக் குறைப்புக்கு ஆளானோர் செலுத்தவேண்டிய மாதாந்தரத் தவணையும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்