Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தீபாவளி சமயத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பெரும் நம்பிக்கையில் மலேசிய இந்திய வியாபாரிகள்

தீபாவளி சமயத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பெரும் நம்பிக்கையில் மலேசிய இந்திய வியாபாரிகள்

வாசிப்புநேரம் -

மலேசியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 90 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டதை அடுத்து, கட்டம் கட்டமாகப் பொருளாதாரம் மீண்டுவருகிறது.

மாநில எல்லைகளைக் கடப்பதற்கும், அனைத்துலகப் பயணங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையும் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வியாபாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கும் என்று வியாபாரிகள் நம்புகின்றனர்.

குறிப்பாக, பொருளாதார நிலையில் பேரிடியைச் சந்தித்த இந்திய வர்த்தகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பு இவ்வாண்டு தீபாவளிதான் !

பண்டிகைக் காலம் என வரும்போது, கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும்போது, முன்னதாகப் பாதிக்கப்பட்ட நிலை மாறி, வணிகர்களின் நிதி நெருக்கடி, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய வாய்ப்பிருக்கிறது.

என்றார் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜவாஹர் அலி.

விழாக்காலத்தில் பொருள் வாங்க வரும்போது, அப்படியே கடையில் உணவருந்த வரும் வாடிக்கையாளர்களும் அதிகரிப்பார்கள். இதனைச் சமாளிக்க இப்போதிருந்தே தயாராகிவருவதாகத் திரு ஜவாகர் அலி சொன்னார்.

தீபாவளி என்றாலே பலகாரம் தான். விழாக்காலப் பலகார வியாபாரத்திற்கென்றே தனி வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.

படங்கள்: தயாளன் சண்முகம்

பலர் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால்,வீட்டில் பலகாரம் செய்வது குறைந்து வருகிறது. இதனால் பலரும் பலகாரங்களை வாங்கவே விரும்புகின்றனர்.

இந்த விழாக்கால வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

என மலேசிய இந்திய வர்த்தக சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஏடி குமரராஜா கூறினார்.

வியாபார நோக்கமாக இருந்தாலும், வீட்டிற்காக இருந்தாலும், பலகாரம் செய்ய அதற்கான மூலப் பொருட்கள் வாங்குகிறவர்கள் எண்ணிக்கை இன்னொரு பக்கம் அதிகரிக்கும்.

அதனால் மளிகைக்கடைகள், பல சரக்குக் கடைகள், மொத்த, சில்லறை வியாபாரிகளுக்கும் இது ஏறுமுகமான காலமாக இருக்கும்.

மலேசியாவின் உணவுத் துறை ஒரு தொடர் சங்கிலி போல இயங்கி வருவதை விளக்கினார், ஜொகூர் மாநில வர்த்தகச் சங்கத்தின் தலைவர் கென்னத் ஈஸ்வரன்.

தீபாவளி காலத்தில் புத்துணர்வுடன் வியாபாரத்தை பெருக்க, முனைப்புடன் இறங்கியுள்ளனர் இந்திய வியாபாரிகள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்