Images
  • msia
    (படம்: Reuters/Lim Huey Teng)

AstraZeneca தடுப்பூசியைப் பயன்படுத்துவதா இல்லையா என்று யோசிக்கும் மலேசியா

AstraZeneca தடுப்பூசியைப் பயன்படுத்துவதா இல்லையா என்று மலேசியா யோசிக்கத் தொடங்கியுள்ளது.

AstraZeneca தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக ரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்தது.

ஆணையத்தின் மறுஆய்வு குறித்து மலேசியாவில் COVID-19 தடுப்பூசித் திட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைச்சர் கைரி ஜமாலுதீன் அக்கறை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தான் மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

AstraZeneca தடுப்பூசிகள் மலேசியாவிற்கு அடுத்த மாதம் தான் வரும் என்பதால் யோசிக்க நேரம் இருப்பதாகத் திரு. கைரி கூறினார்.

மலேசியா 12.8 மில்லியன் முறை போடத் தேவையான AstraZeneca தடுப்பு மருந்தைப் பெறவிருக்கிறது.

அதில் பாதி, COVAX திட்டத்தின் கீழ் கிடைக்கும்.

மலேசியா Pfizer-BioNTech, ரஷ்யா, சீனா ஆகியவற்றிடம் இருந்தும் COVID-19 தடுப்புமருந்துகளை வாங்குகிறது.

 

Top