Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது

மலேசியக் காவல்துறையினர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 4 வெளிநாட்டினரைத் தடுத்து வைத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
மலேசியா: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது

படம்: AFP/Mohd Rasfan

மலேசியக் காவல்துறையினர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 4 வெளிநாட்டினரைத் தடுத்து வைத்துள்ளனர்.

மியன்மாரில் இருந்து மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள 2 ரொஹிஞ்சாக்களும் அவர்களில் அடங்குவர்.

அவர்களில் ஒருவரான 41 வயதுக் கட்டுமான ஊழியர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய காணொளி மூலம் பங்களாதேஷ் பிரதமருக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

பிலிப்பீன்ஸைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபருக்கு அபு சயாப் (Abu Sayyaf) கிளர்ச்சிப் பிரிவுடன் தொடர்பிருப்பதாய் நம்பப்படுகிறது.

சபா மாநிலத்தைச் சுற்றிய கடல்பகுதியில் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும் என மலேசியக் காவல்துறை தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்