Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் மருமகனின் மரணத்தின் தொடர்பில் மருத்துவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி

டாக்டர் டிங், ஸாயினுக்கு மயக்கத்துக்காக 8 ஊசிகள் போட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

வாசிப்புநேரம் -
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் மருமகனின் மரணத்தின் தொடர்பில் மருத்துவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி

(படம்:Instagram/nurulzahid)

மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமீடியின் மருமகனின் மரணத்தின் தொடர்பில் மருத்துவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் பல் மருத்துவமனை ஒன்றில் பல் அகற்றும் அறுவை சிகிச்சைக்குச் சென்றிருந்தார் சையது அல்மான் ஸாயின் ஆல்வி.

அப்போது மகப்பேற்று மருத்துவர் டாக்டர் டிங் டெக் சின் அங்கு மயக்க மருந்து செலுத்தும் பணியில் பகுதிநேர வேலை பார்த்து வந்தார்.

டாக்டர் டிங், ஸாயினுக்கு மயக்கத்துக்காக 8 ஊசிகள் போட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

சிகிச்சையின்போது நோயாளியின் உடல் சிலமுறை நடுக்கமுற்றதாகவும் பின்னர் அவர் முழுமையாகச் சுயநினைவு இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரின் இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க முயற்சி மேற்கொண்டனர்.

வழக்கிலிருந்து இன்று டாக்டர் டிங்கை விடுவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

வாக்குமூலங்களில் வேறுபாடுகள் இருந்ததை நீதிபதி சுட்டினார்.

மிதமிஞ்சிய மயக்க மருந்து காரணமாக இதயம் செயலிழந்திருக்கலாம் என்று மயக்க மருந்து செலுத்துபவரின் வாக்குமூலம் கூறியது. ஆனால் மயக்க மருந்திற்கு ஒவ்வாமை இருந்த காரணத்தால் மரணம் நிகழ்ந்தது என்று தடயவியல் வல்லுநர் தெரிவித்தார்.  

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்