Images
  • hh
    (படம்: Bernama)  

உள்ளூர் சுற்றுப்பயணத்துறையில் கவனம் செலுத்தி வரும் மலேசிய மாநிலங்கள்

சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை நம்பியிருக்கும் மலேசிய மாநிலங்களில் சில, உள்ளூர் சுற்றுப்பயணத்துறையில் கவனம் செலுத்தி வருகின்றன.

COVID-19 கிருமித்தொற்று அச்சம்,
உள்ளூர் சுற்றுப்பயணத்துறையில் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று சிலாங்கூர் (Selangor) மாநிலப் பயணத்துறை மேற்பார்வையாளர் அப்துல் ரஷிட் அசாரி நம்பிக்கை தெரிவித்தார் .

2017-ஆம் ஆண்டிலிருந்து, சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை தந்த சுற்றுப்பயணிகளில் சீனாவைச் சேர்ந்தவர்களே அதிகம்.

இந்தோனேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் அடுத்த நிலைகளில் உள்ளனர்.

COVID-19 கிருமித்தொற்று, இவ்வாண்டுக்கான மலேசியாவின் சுற்றுப்பயணத்துறை இயக்கத்தைப் பாதித்துள்ளது.

அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று நம்பப்படுகிறது. 

Top