Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை

கண்மூடித்தனமாக லாரியைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய மலேசிய லாரி ஓட்டுநருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 40,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் குடும்பம் பலியான சம்பவத்தில் மலேசிய லாரி ஓட்டுநருக்குச் சிறை

(இணையத்தில் பரவிவரும், போர்ட் டிக்சன் விபத்தைக் காட்டும் படம்)

கண்மூடித்தனமாக லாரியைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய மலேசிய லாரி ஓட்டுநருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 40,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள். சம்பவத்தின் தொடர்பில் 55 வயது லாரி ஓட்டுநரான மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஓட்டுநர் உரிமம் மூவாண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

போர்ட் டிக்சன் அருகே உள்ள லூகுட்-செபாங் சந்திப்பில் அந்த விபத்து நேர்ந்தது. விபத்தின்போது சிங்கப்பூரர்களான 54 வயது ரோஸ்லி சாமாட்டும், 51வயது மைமுனா சப்பாரியும் அவர்களின் இரு மகள்களுடன் காரில் இருந்தனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்