Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'மலேசியா மிக விரைவாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டது'

மலேசிய அரசாங்கம் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை மிக விரைவாகத் தளர்த்திவிட்டதாகக் குறைகூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசிய அரசாங்கம் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை மிக விரைவாகத் தளர்த்திவிட்டதாகக் குறைகூறப்பட்டுள்ளது.

 கிருமித்தொற்றிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கக் கூடாது என்று மலேசியத் தடுப்புமருந்து ஆலோசனைக் குழு New Sunday Times செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்துவதில் சில மாறுபட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதையும் அது சுட்டியது.

மலேசியா மூன்றாம் கட்டக் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகிறது.

தொடர்ச்சியாக 3 நாள்கள் அங்கு 2,000க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு இதுவரை பதிவாகியிருக்கும் கிருமித்தொற்று எண்ணிக்கை 372,000க்கும் அதிகம்.

சமூகத்தில் புதுவகைக் கிருமி பரவத்தொடங்கியிருக்கலாம் என்று ஆலோசனைக் குழுவின் தலைவர் எச்சரித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்