Images
  • bernama
    (Bernama)

ஜொகூரில் சிங்கப்பூரர்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் மலேசிய அமைச்சு

சிங்கப்பூரர்கள் ஜொகூரில் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அவசர அவசரமாக வாங்கிக் குவிக்கிறார்களா என்பதை கண்காணித்துவருவதாக மலேசிய உள்நாட்டு வர்த்தக, பயனீட்டு விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜொகூர், இஸ்கந்தர் புத்தேரி, பாசிர் குடாங், குலாய் ஆகிய பகுதிகளில் மலேசியர்கள் வாங்கப் போதுமான அளவு அத்தியாவசியப் பொருள்கள் உள்ளனவா என்பது சோதனை செய்யப்பட்டதாக மலேசியா தெரிவித்தது.

இதுவரை 1,124 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் சென்ற வெள்ளிக்கிழமை சுகாதார எச்சரிக்கை விழிப்புநிலை ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிங்கப்பூரர்கள் சிலர் பதறியடித்துக்கொண்டு பேரங்காடிகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவித்தனர்.

சிங்கப்பூரில் அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவு இருப்பதை உறுதிப்படுத்திய சிங்கப்பூர் அமைச்சர்கள், மக்கள் பதறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

பிரதமர் லீ சியென் லூங்கும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்பதை வலியுறுத்தினார்.  

Top