Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்படமாட்டாது

மலேசியாவில், நேற்று மேலும் சுமார் 6,200 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த அறிக்கை வெளிவந்தது.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்படலாம் என வெளிவந்த அறிக்கையை, அந்நாட்டுச் சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

Malay Mail செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

சுகாதார அமைச்சர் ஆதாம் பாபாவை (Adham Baba) மேற்கொள்காட்டி, அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

மலேசியாவில், நேற்று மேலும் சுமார் 6,200 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த அறிக்கை வெளிவந்தது.

நேற்று முன்தினம் பதிவான சுமார் 5,500 சம்பவங்களைவிட அது அதிகம்.

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதும் கவலை அளிக்கிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சுமார் 900 COVID-19 நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதிப்பேருக்குச் சுவாசக் கருவிகள் தேவைப்படுகின்றன.

அந்த எண்ணிக்கை, கடந்த மாதத்திலிருந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்