Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: ஊழியர்கள் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று - தற்காலிகமாக மூடப்படும் 28 ரப்பர் தொழிற்சாலைகள்

மலேசியா: ஊழியர்கள் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று - தற்காலிகமாக மூடப்படும் 28 ரப்பர் தொழிற்சாலைகள்

வாசிப்புநேரம் -

மலேசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளானதையடுத்து, 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

உலகின் ஆகப் பெரிய ரப்பர் உற்பத்தி நிறுவனமான Top Glove, அதன் 28 தொழிற்சாலைகளைக் கட்டங்கட்டமாக மூடவிருக்கிறது.

நிறுவனத்தின் ஊழியர்கள் சுமார் 1,900பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

ஊழியர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்றுச் சோதனை நடத்தி, தனிமைப்படுத்தும் நோக்கில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

கிருமிப் பரவல் சூழலில், மருத்துவக் கையுறைகள், தனிநபர் பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுக்கான தேவை அதிகரித்ததால், Top Glove நிறுவனம் இந்த ஆண்டு பெரும் லாபம் ஈட்டியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்