Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நாட்டைக் காப்பாற்ற கட்சிகள் ஒன்றிணைந்தன : மலேசிய நிதியமைச்சர்

திரு. லிம், பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியின் 4 கட்சிகளில் ஒன்றான ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரும் ஆவார்.

வாசிப்புநேரம் -
நாட்டைக் காப்பாற்ற கட்சிகள் ஒன்றிணைந்தன : மலேசிய நிதியமைச்சர்

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

மலேசியாவின் புதிய அரசாங்கத்தை ஒருங்கிணைத்த முக்கியக் காரணமாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடங்கிய 1MDB நிதி தொடர்பான ஊழல் விளங்குவதாக, அந்நாட்டு நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.

திரு. லிம், பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியின் 4 கட்சிகளில் ஒன்றான ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரும் ஆவார்.

அந்தக் கூட்டணியின் கட்சிகள் வெவ்வேறு சித்தாத்தங்களைக் கொண்டிருந்தாலும், சென்ற மாதப் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை அவை வீழ்த்தின.

சேனல் நியூஸ் ஏஷியாவுடனான நேர்காணலில், பிரதமர் மகாதீர் முகமதுடன் பணியாற்றும் அனுபவம் குறித்துத் திரு. லிம்மிடம் கேட்கப்பட்டது.

முன்னர் திரு.லிம்மின் கட்சி, டாக்டர் மகாதீரை முழுமூச்சாக எதிர்த்துவந்ததும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்குப் பதிலளித்த திரு. லிம், ஒரு விதத்தில் தங்களை இணைத்தது முன்னாள் பிரதமர் நஜிப்தான் என்றார்.

1MDB ஊழலால், ஒன்றுபட்டது மட்டுமின்றி, அரசாங்கத்தை மாற்றவும், சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டைக் காப்பாற்றத் தாங்கள் கைகோத்துள்ளதாக மலேசிய நிதியமைச்சர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்