Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19 : 3.7 பில்லியன் டாலர் மதிப்புமிக்க புதிய பொருளியல் உதவித் திட்டம்-மலேசியப் பிரதமர் அறிவிப்பு

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின், 3.7 பில்லியன் டாலர் மதிப்புமிக்க புதிய பொருளியல் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின், 3.7 பில்லியன் டாலர் மதிப்புமிக்க புதிய பொருளியல் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

கோவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைச் சமாளிக்க, PERMAI என்னும் அந்தத் திட்டம் கைகொடுக்கும்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், அவர் அந்த விவரங்களை வெளியிட்டார்.

PERMAI திட்டம் 3 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும்.

கோவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துதல், மக்கள் நலனைப் பாதுகாத்தல், வர்த்தகங்கள் தொடர்ந்து செயல்பட ஆதரவு அளித்தல் ஆகியவை அவை என்று திரு. முஹிதீன் விளக்கினார்.

அந்த 3 அம்சங்களின் அடிப்படையில், மொத்தம் 22 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

மூன்றாம் கட்டக் கிருமிப் பரவலைக் கையாள மலேசியா போராடும் வேளையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தற்போது தேசிய அளவில் அங்கு 155 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறை, மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகத் திரு. முஹிதீன் சொன்னார்.

மலேசிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா, கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டில் நெருக்கடிநிலையை அறிவித்தார்.

பிரதமர் முஹிதீன், சில மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அறிவித்த மறுநாள், நெருக்கடிநிலை பற்றிய அறிவிப்பு வெளியானது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்