Images
  • malaysia
    படம்: Bernama / Fire and Rescue Department

மலேசியா: பிரபல விளையாட்டாளருடன் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலி

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று 30 டன் கனரக வாகனத்தின் பின்னால் மோதியதில் வேன் ஓட்டுநர் பவன் நாகேஸ்வரராவ் மாண்டார். அதில் பயணம் செய்த 4 பயணிகளும் காயமடைந்தனர்.

அவர்களில், ஜப்பானிய பேட்மிண்டன் விளையாட்டாளர் கென்டோ மோமோடாவும் (Kento Momota) அடங்குவார். அவர்கள் புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் இன்று அதிகாலை மணி 4.40 அளவில் நடந்தது. அதுகுறித்து அவசரகாலச் சேவைப் பிரிவினருக்கு அதிகாலை 5 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்ட வேன் ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவிரைச் சேர்ந்த இயக்குநர் தெரிவித்தார்.


Top