Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: முக்காடு அணியாத பெண்களைப் பற்றிய புத்தகம் குறித்து விசாரணை

மலேசியாவில் முக்காடு அணிய வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்களைப் பற்றிய புத்தகம் குறித்து சமய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -


(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவில் முக்காடு அணிய வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்களைப் பற்றிய புத்தகம் குறித்து சமய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விசாரணை பெண்ணுரிமை குழுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமுள்ள மலேசியாவில் பெண்கள் அணியும் ஆடைகள் மீது அளவுக்கு மீறி கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகப் பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

'Unveiling Choice' எனும் புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

தாங்கள் முக்காடு அணிவதை நிறுத்தியதற்கான காரணம் குறித்த சில முஸ்லிம் பெண்களின் கருத்துக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

புத்தகம் குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தச் சொல்லியிருப்பதாய் மலேசியாவின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் கூறினார்.

எந்தச் சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது என்பது தெரிவிக்கப்படவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்