Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் ஹஜ்ஜுப் பெருநாள்

மலேசியா, இந்தோனேசியா போன்ற முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழும் நாடுகளில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்கள் மாறுபட்ட வகையில் நடைபெறுகின்றன. 

வாசிப்புநேரம் -
மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் ஹஜ்ஜுப் பெருநாள்

(படம்: AFP / Juni Kriswanto)

மலேசியா, இந்தோனேசியா போன்ற முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழும் நாடுகளில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்கள் மாறுபட்ட வகையில் நடைபெறுகின்றன. கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க நோய்ப்பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்தோனேசியா
உலகில் ஆக அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் இந்த ஆண்டு, குர்பான் சடங்கு தொடர்பான நிகழ்ச்சிகள் Facebook உள்ளிட்ட இணையத் தளங்களில் நடத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பைக் குறைக்கும் நோக்கில் பண்ணை உரிமையாளர்கள் இணைய விற்பனையை நாடியுள்ளனர்.

இன்று (ஜூலை 31) பெரிய அளவிலான கூட்டுத் தொழுகைகளிலும் குர்பான் சடங்கிலும் பங்குபெறுவோர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும் என்று இந்தோனேசிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கிருமிப்பரவல் அதிகம் காணப்படும் பகுதிகளில் பெரிய அளவிலான கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி இல்லை.

மலேசியா

மலேசியப் பிரதமர் முஹிதின் யாசின், முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், கிருமிப்பரவல் தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் நினைவில்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

குர்பான் சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளவேண்டாம் என்று அவர் நினைவுறுத்தினார். சடங்கு முடிந்து, இறைச்சி விநியோகம் செய்யப்பட்ட பிறகு, உடனடியாக வீடு திரும்பும்படி மலேசியப் பிரதமர் வலியுறுத்தினார்.

நாட்டில் கிருமிப்பரவல் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்