Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கோலாலம்பூர் இலகு ரயில் விபத்தில் முக்கிய நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டன - மலேசியப் போக்குவரத்து அமைச்சர்

அப்போது முக்கியமான சில நடைமுறைகளை அந்தப் பயிற்சி ஓட்டுநரும் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தவரும் புறக்கணித்திருப்பதாக டாக்டர் வீ சொன்னார்.

வாசிப்புநேரம் -


கோலாலம்பூரில் நடந்த கிளானா ஜெயா இலகு ரயில் விபத்தில் சில முக்கியமான நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டதாக விசாரணை முடிவுகள் காட்டுகின்றன.

கடந்த மாதம் 24ஆம் தேதி விபத்து ஏற்பட்டது.

மலேசியப் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் செய்தியாளர் கூட்டத்தில் அது குறித்த மேல் விவரங்களை அளித்தார்.

நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் இரண்டு ரயில்களில் ஒன்று தவறான திசையில் சென்றிருக்கிறது.

KLCC நிலையத்திலிருந்து திட்டமிட்டதைவிட முன்கூட்டியே கிளம்பிய ரயிலுடன் அது மோதியது.

தானியக்க ரயில் செயல்பாடுகளின்வழி, தேவையான பராமரிப்பக்காக, ரயில்களில் ஒன்று கிடங்கிற்குக் கொண்டுவரப்படவேண்டும்.

ஆனால் அன்று கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அது கம்போங் பாரு நிலையத்திலேயே நின்றது.

அந்த ரயிலை அருகில் உள்ள பகுதிக்கு ஓட்டிச்செல்ல பயிற்சி ஓட்டுநர் அழைக்கப்பட்டுள்ளார்.

அப்போது முக்கியமான சில நடைமுறைகளை அந்தப் பயிற்சி ஓட்டுநரும் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தவரும் புறக்கணித்திருப்பதாக டாக்டர் வீ சொன்னார்.

அந்த விபத்தில் 210க்கும் அதிகமான பயணிகளுக்குப் பல வகையான காயங்கள் ஏற்பட்டன. ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான 23 பரிந்துரைகளை விசாரணைக் குழு முன்வைத்துள்ளதாக டாக்டர் வீ கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்