Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் அதிகமான வேலைகளை உருவாக்க 6.5 பில்லியன் ரிங்கிட் நிதி - பிரதமர் மகாதீர்

மலேசியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் அதிகமான வேலைகளை உருவாக்க 6.5 பில்லியன் ரிங்கிட் தொகையை அரசாங்கம் ஒதுக்குமெனப் பிரதமர் மகாதீர் முகமது அறிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -

மலேசியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் அதிகமான வேலைகளை உருவாக்க 6.5 பில்லியன் ரிங்கிட் தொகையை அரசாங்கம் ஒதுக்குமெனப் பிரதமர் மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.

புதிய வேலைகளை உருவாக்கும் நோக்கம் கொண்ட Malaysia@Work திட்டத்தின் அறிமுக விழாவில் அவர் அதனை அறிவித்தார்.

அந்தத் திட்டம், ஐந்து ஆண்டுகளைத் தாண்டி நீண்ட காலத்துக்கு, அடுத்தடுத்த விளைவுகளை ஏற்படுத்துமென்று அவர் சொன்னார்.

திட்டம், புதிய வேலைகளை உருவாக்குவதோடு கற்றல் வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும்.

வேலையின்மையால் உருவாகும் பிரச்சினைகளைத் தீர்க்க, ஒவ்வொருவரும் தமது பங்கை ஆற்ற வேண்டுமென மலேசியப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தவறினால் அது, சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துமென்று அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இளையர்களில் கணிசமானோர் வேலையின்றி இருந்தால், அவர்களின் ஆற்றலை நாடு இழக்குமென்றார் டாக்டர் மகாதீர்.

வேலையின்மைச் சவாலுக்கான மலேசியத் தீர்வே Malaysia@Work என்று அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்