Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அரசியல் நோக்கத்தோடு நியமிக்கப்பட்ட 17,000 பேர் பதவிநீக்கம் செய்யப்படலாம் : மலேசியப் பிரதமர்

இருப்பினும், குறைந்த சம்பளம் கொண்ட ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு, அவர்களின் தகுதிக்கேற்ப வேறு வேலைகள் வழங்கப்படலாம் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

வாசிப்புநேரம் -
அரசியல் நோக்கத்தோடு நியமிக்கப்பட்ட 17,000 பேர் பதவிநீக்கம் செய்யப்படலாம் : மலேசியப் பிரதமர்

(படம்:REUTERS/Lai Seng Sin)

மலேசியாவில் அரசியல் நோக்கத்துடன் நியமனம் பெற்ற சுமார் 17,000 பேர் விரைவில் பதவிநீக்கம் செய்யப்படுவர் என்று பிரதமர் மகாதீர் முகம்மது கூறியிருக்கிறார்.

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி நிர்வாகம், முன்னைய தேசிய முன்னணியின் நிர்வாகம் நியமித்த அதிகப்படியான அலுவலர்களை நீக்க எண்ணம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது நோக்கம்.

இருப்பினும், குறைந்த சம்பளம் கொண்ட ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு, அவர்களின் தகுதிக்கேற்ப வேறு வேலைகள் வழங்கப்படலாம் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்