Images
  • Malaysia Judges
    (படம்: Bernama) 

மலேசிய மூத்த நீதிபதிகள் இருவர் பதவி விலகல்

மலேசியாவின் இரண்டு மூத்த நீதிபதிகள் பதவி விலகியுள்ளனர்.

டாக்டர் மகாதீரின் அரசாங்கம், முன்னாள் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் எனக் கருதப்படும் மூத்த அதிகாரிகளை அகற்றி வரும் வேளையில் அந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

அகற்றப்பட்ட அல்லது பதவி விலகிய மூத்த அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது.

தலைமை நீதிபதி ராவு ஷரிஃபும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஸுல்கெஃபி அகமது மகினுடினும் அடுத்த மாத இறுதியில் பதவியிலிருந்து விலகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

உங்கள் கருத்து

Top