Images
  • malaysia king (1)
    கோப்புப்படம்: REUTERS

மலேசிய மாமன்னர் நாட்டின் COVID-19 நிலவரம் குறித்து அரசியல் தலைவர்களுடன் பேச்சுநடத்தத் திட்டம்

மலேசிய மாமன்னர், நாட்டின் COVID-19 நிலவரம் குறித்து அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகக் தகவல்கள் கூறுகின்றன.

மலேசிய அரசாங்கம் கிருமிப்பரவலைக் கையாளும் விதம் குறித்து நிலவும் அதிருப்திக்கு இடையே இன்று அந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் கடந்த ஜனவரி மாதம் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் நிலைமை இன்னும் மேம்படவில்லை.

இந்நிலையில், மலேசிய அரச மாளிகையில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பல்வேறு சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நெருக்கடிநிலையை அகற்றுமாறு மாமன்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அது இதுவரை பலனளிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சந்திப்புகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜனவரி மாதத்திலிருந்து மலேசிய நாடாளுமன்றக் கூட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவை மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  

Top