Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய அரசியல் நெருக்கடி: மாமன்னர் அடுத்த ஒரு வாரத்திற்கு யாரையும் சந்திக்கமாட்டார்

மலேசிய அரசியல் நெருக்கடி: மாமன்னர் அடுத்த ஒரு வாரத்திற்கு யாரையும் சந்திக்கமாட்டார் 

வாசிப்புநேரம் -
மலேசிய அரசியல் நெருக்கடி: மாமன்னர் அடுத்த ஒரு வாரத்திற்கு யாரையும் சந்திக்கமாட்டார்

படம்: REUTERS

மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா மருத்துவமனைக் கண்காணிப்பில் இருப்பதால், அடுத்த ஒரு வாரத்திற்கு யாரையும் சந்திக்கமாட்டார் என்று அரண்மனைத் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில், மாமன்னரைச் சந்திக்க அனுமதி கோரிய வேளையில் அந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

பிரதமர் முஹிதீன் யாசினைப் பதவியிலிருந்து நீக்கப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகத் திரு. அன்வார் கூறியிருந்தார். ஆனால் மாமன்னரிடம் அவர் அதை நிரூபிக்கவேண்டும்.

மலேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெறும் ஒருவரைப் பிரதமராக நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்கு உண்டு.

பிரதமரின் ஆலோசனைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், பொதுத் தேர்தலை அறிவிக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

திரு. முஹிதீன் யாசின் மலேசியாவின் பிரதமராகப் பொறுப்பேற்று 7 மாதங்களே நிறைவுற்றுள்ளன.

இந்நிலையில் மேலும் ஓர் ஆட்சி மாற்றம், கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட பொருளியலின் நிலைத்தன்மையை பாதிக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்