Images
  • malaysia king (1)
    (படம்: REUTERS/Lai Seng Sin/Files)

'நிச்சயமற்ற அரசியல் சூழல் மூலம் நாட்டை மேலும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டாம்': மலேசிய மாமன்னர்

மலேசிய அரசியல்வாதிகள், நிச்சயமற்ற அரசியல் சூழல் மூலம் நாட்டை மேலும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்று மாமன்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு அவர் மலேசிய அரசியல்வாதிகளை வலியுறுத்தினார்.

பிரதமர் முஹிதீன் யாசினுக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே அதிகாரப் போட்டி நடந்துவரும் நிலையில் மாமன்னர் அவ்வாறு கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை, மலேசிய மாமன்னரைச் சந்தித்த திரு அன்வார், புதிய அரசாங்கம் அமைப்பதற்குத் தமக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார்

இந்நிலையில், முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீரும், அவருடைய கூட்டணியில் உள்ளவர்களும் திரு. முஹிதீனும் பிரதமர் பதவியிலிருந்து அகற்ற முயல்கின்றனர்.

அடுத்த மாதம் 2 ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கூடும்போது, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர டாக்டர் மகாதீரின் Pejuang கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.   

Top