Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் முடக்கநிலை மேலும் 2 வாரம் நீட்டிப்பு

வரும் திங்களன்று முடிவுக்கு வரவிருந்த முடக்கநிலையை நீட்டிக்கும்படி மலேசியாவின் சுகாதார அமைச்சு முன்னதாகப் பரிந்துரைத்திருந்தது.

வாசிப்புநேரம் -


மலேசியாவில் நடப்பிலுள்ள முடக்கநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகத் தற்காப்புக்கான மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார் .

வரும் திங்களன்று முடிவுக்கு வரவிருந்த முடக்கநிலையை நீட்டிக்கும்படி மலேசியாவின் சுகாதார அமைச்சு முன்னதாகப் பரிந்துரைத்திருந்தது.

அதை ஏற்றுக்கொண்ட அந்நாட்டுத் தேசியப் பாதுகாப்பு மன்றம், முடக்கநிலையை இம்மாதம் 28ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது.

மலேசியாவில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டபோதும், அங்குப் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை ஏழாயிரத்தை நெருங்கியுள்ளது.

பெரும்பாலான நோய்ச் சம்பவங்களும் மரணங்களும் சிலாங்கூரில் நேர்ந்தன.

தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 884 பேர் பாதிக்கப்பட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்