Images
  • malaysia covid (1)
     (படம்: AFP/Mohd Rasfan) 

மலேசியாவில் நெரிசல்மிக்க பொது இடங்களில் மக்கள் இன்றுமுதல் முகக்கவசம் அணியவேண்டும்

மலேசியாவில் கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, இன்றிலிருந்து நெரிசல்மிக்க பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளியே செல்லும்போதெல்லாம் பொதுமக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்பதே நீண்டகாலத் திட்டம் என்று மலேசிய சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா(Noor Hisham Abdullah) கூறினார்.

புதிய சட்டத்தின் கீழ், முகக்கவசம் அணிய மறுப்போருக்கு 1,000 ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

மலேசியாவில் மேலும் 12 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து சுமார் 9,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் மாண்டதால், மாண்டோர் எண்ணிக்கை 125ஆகப் பதிவானது.

மலேசியாவில் கிருமிப்பரவல் அதிகரித்ததற்குப், பொதுமக்கள் அரசாங்க நடவடிக்கைகளுக்கு இணங்காததும், மெத்தனப்போக்கும் காரணங்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Top