Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஓரினப் பாலுறவுக் காணொளியில் இருப்பவர் மலேசிய அமைச்சர் - ஆடவர் தகவல்

மலேசியாவில் ஓரினப் பாலுறவுக் காணொளி ஒன்றில் இருப்பது தான்தான் என்பதை ஒப்புக்கொண்ட ஓர் ஆடவர் தன்னுடன் இருப்பவர் ஒரு மலேசிய அமைச்சர் என்று கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
ஓரினப் பாலுறவுக் காணொளியில் இருப்பவர் மலேசிய அமைச்சர் - ஆடவர் தகவல்

படம்: Haziq Aziz/ Facebook.

மலேசியாவில் ஓரினப் பாலுறவுக் காணொளி ஒன்றில் இருப்பது தான்தான் என்பதை ஒப்புக்கொண்ட ஓர் ஆடவர் தன்னுடன் இருப்பவர் ஒரு மலேசிய அமைச்சர் என்று கூறியிருக்கிறார்.

ஹாஸிக் அஸிஸ் (Haziq Aziz) என்பவர் Facebook காணொளி ஒன்றில் அவ்வாறு கூறியிருக்கிறார்.

காணொளியில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் ஒரு தலைவராக இருக்கத் தகுதியற்றவர் என்றும் அவர் சொன்னார்.

தமது அனுமதி இல்லாமல் அந்தக் காணொளி மே 11-ஆம் தேதி Four Points விடுதியில் எடுக்கப்பட்டதென ஹாஸிக் அஸிஸ் பகிர்ந்துகொண்டார்.

தாம் ஒரு துணையமைச்சரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர் பணியில் இருப்பதாக அவர் Facebook பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் அடையாளங்காட்டிய அமைச்சரிடம் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஊழல் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று ஹாஸிக் அஸிஸ் கேட்டுக்கொண்டார்.

நேற்று இணையத்தில் பரவிய மூன்று காணொளிகள் 2 ஆண்கள் ஓரினப் பாலுறவில் ஈடுபட்டிருப்பதைக் காட்டின.

அதுகுறித்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதிடம் கருத்துக் கேட்டிருந்தபோது பிரதமர் மகாதீர் அதுபற்றித் தமக்கு எதுவும் தெரியாதென கூறியிருந்தார்.

அப்போதுதான் அந்த விவகாரத்தைப்பற்றித் தாம் கேள்விப்பட்டதாகவும் செய்தியாளர்கள் மேற்கொண்டு தகவலளிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

அம்னோ அமைப்பின் ஆக உயர்நிலை உறுப்பினர் ஒருவர் காவல்துறையிடம் புகார் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டிருப்பதாக The Star நாளேடு குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்