Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் 5 மாநிலங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு : மீண்டு(ம்) இயல்பு நிலைக்குத் திரும்புவோம் மலேசியர்கள் நம்பிக்கை

மலேசியாவில் 5 மாநிலங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு : மீண்டு(ம்) இயல்பு நிலைக்குத் திரும்புவோம் மலேசியர்கள் நம்பிக்கை

வாசிப்புநேரம் -

மலேசியாவில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தற்போது மிக அதிகமாகப் பதிவாகின்றன.

அக்டோபர் தொடங்கி நான்கு இலக்க எண்களில் தினந்தோறும் COVID-19 சம்பவங்கள் பதிவான நிலையில் இம்மாதம் 7-ஆம் தேதி மிக அதிகமாக 3,027 பேர் இந்நோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர்.

நோய்ப்பரவல் மேலும் மோசமடைவதைத் தடுக்க மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் ஜனவரி 13ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 5 மாநிலங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் என அறிவித்துள்ளார்.

இதனால் மலேசிய மக்கள் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர்.

அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனும் கவலை இருந்தாலும் இதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

ஜொகூரில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வருவதால் வீடு திரும்ப முடியாமல் தவிப்பதாகக் கூறுகிறார் கோலாலம்பூரில் பணிபுரியும் லோகேஸ்வரி இராமன்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது காலத்தின் கட்டாயம் எனக் கூறுகிறார் ஜொகூர் பாருவில் வசிக்கும் பிரியா ஏகாம்பரம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பல துறைகளை வீட்டிலிருந்தவாறு பணிபுரிய மலேசிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் வேலை, மேலாண்மை, நிர்வாகச் சிக்கல், ஆவணச் சிக்கலோடு வேலைத்தரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்திருப்பதாக மனிதவள – சட்ட ஆலோசகர் நவனீத் பிரபாகரன் கூறியுள்ளார்.

மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு பொருளாதாரத் துறைகள் இயங்குவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்த 14 நாள்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்