Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: நாளை மறுநாளிலிருந்து கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு உட்பட சில வட்டாரங்களில் 2 வாரங்களுக்கு கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு

மலேசியா: நாளை மறுநாளிலிருந்து கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு உட்பட சில வட்டாரங்களில் 2 வாரங்களுக்கு கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு

வாசிப்புநேரம் -
மலேசியா: நாளை மறுநாளிலிருந்து கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு உட்பட சில வட்டாரங்களில் 2 வாரங்களுக்கு கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு

(கோப்புப் படம்: Bernama)

மலேசியாவில், சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜொகூர், சபா, கோலாலம்பூர், புத்தரஜெயா, லபூவான் ஆகிய பகுதிகளில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

நாளை மறுநாள் புதன்கிழமை நள்ளிரவிலிருந்து இம்மாதம் 26 ஆம் தேதி வரை கட்டுப்பாடு நீடிக்கும்.

அதிகரித்துவரும் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உதவும் என நம்பப்படுகிறது.

இன்று மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் அது குறித்து சிறப்புரை ஆற்றினார்.

மலேசியா முழுவதும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளால், நாள்தோறும் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் விகிதத்தை 80 விழுக்காடு வரை குறைக்க முடியும் என்று நம்புவதாக மலேசியச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்