Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: வசதி குறைந்தவர்களுக்கு அரிசி தானியக்க வங்கி இயந்திரம்

கோலாலாம்பூரின் கம்போங் டத்தோக் கிராமாட்டிலுள்ள (Kampung Datuk Keramat) அல்-அக்ராம் (Al-Akram) பள்ளிவாசல், வசதி குறைந்தவர்களுக்கு உதவ புதிய தானியக்க வங்கி இயந்திரத்தை அமைத்துள்ளது.   

வாசிப்புநேரம் -
மலேசியா: வசதி குறைந்தவர்களுக்கு அரிசி தானியக்க வங்கி இயந்திரம்

படம்: Youtube/Jabatan Agama Islam Wilayah Persekutuan - JAWI

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்

மலேசியா: கோலாலாம்பூரின் கம்போங் டத்தோக் கிராமாட்டிலுள்ள (Kampung Datuk Keramat) அல்-அக்ராம் (Al-Akram) பள்ளிவாசல், வசதி குறைந்தவர்களுக்கு உதவ புதிய தானியக்க வங்கி இயந்திரத்தை அமைத்துள்ளது.  

ஆனால், அந்த இயந்திரத்திலிருந்து பணம் பெற இயலாது. மாறாக, அதிலிருந்து அரிசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

வசதி குறைந்தவர்கள் ஓர் அட்டையைப் பயன்படுத்தி அந்த இயந்திரத்திலிருந்து 2 கிலோ அரிசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

மலேசியாவில் அமைக்கப்பட்டுள்ள அத்தகைய முதல் இயந்திரம் அது.

வசதி குறைந்தவர்களுக்கு நன்கொடை கொடுக்க விரும்புபவர்களும் அந்த இயந்திரத்தின் வழி அவ்வாறு செய்யலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்