Images
  • malaysian boats
    (படம்: REUTERS/Lim Huey Teng)

மியன்மார் ஊழியர்களை அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பும் மலேசியாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு

மியன்மார் ஊழியர்களை அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பும் மலேசியாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

மியன்மாருக்குப் புறப்படும் 3 கப்பல்களில் சுமார் 1,200 ஊழியர்கள் இன்று நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக் மாநிலத்தின் லுமுட் (Lumut) கடற்படைத் துறைமுகத்தில் 3 மியன்மார் கடற்படைக் கப்பல்கள் அணைந்திருப்பது பற்றி மலேசியா தகவல் வெளியிடவில்லை.

நோய்ப்பரவலால் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மியன்மார் ஊழியர்களை, அவர்களின் சொந்த நாட்டுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக அந்தக் கப்பல்கள் வந்திருப்பதாய் மியன்மார் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நாடு திரும்புவோரின் பாதுகாப்பு பற்றி சிறுபான்மை சமூகத் தலைவர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக மலேசியாவுக்குத் தப்பிச் சென்றவர்களின் நிலை என்னவாகும் எனும் கவலையும் எழுந்துள்ளது.  

Top