Images
  • Malaysia
    படம்: AP Images

அவசரநிலையின்போது, நாடாளுமன்றக் கூட்டமோ, தேர்தலோ இடம்பெறாது: மலேசியப் பிரதமர் முஹிதீன்

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின், நெருக்கடி நிலை நடப்பிலிருக்கும்போது, நாடாளுமன்றக் கூட்டமோ தேர்தலோ நடத்தப்படாது என்று கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சில கட்சிகள் முனைப்புடன் இருப்பதாகச் சுட்டினார்.

ஆனால், பொதுத் தேர்தலை நிறுத்தி வைப்பது தம்முடைய நோக்கமல்ல என்றார் அவர்.

கிருமிப்பரவல் காரணமாக, தேர்தல் நடத்துவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு மன்னரிடம் கோர முடியவில்லை என்றார் அவர்.

கிருமிப்பரவல் சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவது மக்களுக்கு ஓர் அச்சுறுத்தல் என்றார் திரு. முஹிதீன்.

நெருக்கடி நிலை ராணுவ அடக்குமுறை அல்ல என்ற அவர், மக்களாட்சியில் அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் என்றார்.  

Top