Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: உணவு, பானக் கடைகளில் அடுத்த மாதத்திலிருந்து உறிஞ்சு குழல்கள் வழங்கப்படமாட்டா

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உணவு, பானக் கடைகளில்,  ஜூலை முதல் தேதியிலிருந்து பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் வழங்கப்படமாட்டா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா: உணவு, பானக் கடைகளில் அடுத்த மாதத்திலிருந்து உறிஞ்சு குழல்கள் வழங்கப்படமாட்டா

(படம்: AFP)

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உணவு, பானக் கடைகளில்,  ஜூலை முதல் தேதியிலிருந்து பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் வழங்கப்படமாட்டா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் விளையும் சுற்றுப்புறக் கேடுகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில் அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

என்றாலும், வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றால் உறிஞ்சு குழல்களை உணவு, பானக் கடைக்காரர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒருமுறைப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், கொள்கலன்கள், உறைகள் ஆகியவற்றுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை உள்ளூர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று சிலாங்கூர் மாநிலச் சுற்றுப்புற, பசுமைத் தொழில்நுட்ப, அறிவியல், பயனீட்டாளர் விவகாரக் குழுத் தலைவர் ஹோ லோய் சியென் கூறினார்.

உறிஞ்சு குழல் பயன்பாட்டுக்கான கட்டுப்பாட்டு நடைமுறைகளை மீறினால், சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

சிலாங்கூரில் உள்ள சில உணவு, பானக் கடைகள் ஏற்கனவே காகிதம், மூங்கில் ஆகியவற்றால் செய்யப்பட்ட உறிஞ்சு குழல்களைப் பயன்படுத்துகின்றன.

இன்னும் சில கடைகள் துருப்பிடிக்காத உலோக உறிஞ்சு குழல்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன என்பதைத் திரு. ஹோ சுட்டினார்.

உணவு, பானங்கள் வாங்க வரும் பொதுமக்கள், மறுபயனீட்டுக்கு உகந்த கலன்களைக் கொண்டு வருமாறும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்