Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா - விருப்பத்தின் அடிப்படையில் தேசிய சேவை செய்யும் திட்டம், குடிமைப் பண்புப் பிரிவு உடனடி ரத்து

மலேசியா, விருப்பத்தின் அடிப்படையில் தேசிய சேவை செய்யும் திட்டத்தையும் சர்ச்சைக்குரிய குடிமைப் பண்புப் பிரிவையும் உடனடியாக ரத்து செய்வதாக இளையர், விளையாட்டு அமைச்சர் சையது சாதிக் சையது அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman) இன்று (ஆகஸ்ட் 13) தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -
மலேசியா - விருப்பத்தின் அடிப்படையில் தேசிய சேவை செய்யும் திட்டம், குடிமைப் பண்புப் பிரிவு உடனடி ரத்து

(படம்: Reuters)

மலேசியா, விருப்பத்தின் அடிப்படையில் தேசிய சேவை செய்யும் திட்டத்தையும் சர்ச்சைக்குரிய குடிமைப் பண்புப் பிரிவையும் உடனடியாக ரத்து செய்வதாக இளையர், விளையாட்டு அமைச்சர் சையது சாதிக் சையது அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman) இன்று (ஆகஸ்ட் 13) தெரிவித்தார்.

மலேசிய அமைச்சரவை இதனைக் கடந்த வாரம் முடிவு செய்ததாக அவர் கூறினார்.

அண்மைக் காலமாக இரு திட்டங்களையும் ரத்து செய்வது குறித்து ஆளும் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி அமைச்சர்கள் கோடிகாட்டி வந்தனர்.

இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட மனிதவளமும் வளங்களும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு மாற்றிவிடப்படும் என்றும் திரு. சையது சாதிக் கூறினார்.

மலேசியாவின் தேசிய சேவைத் திட்டம் 18 வயது இளையர்கள் சிலருக்கு மட்டும் கட்டாயமாக இருந்து வந்தது.

அந்த முறையைப் பலரும் சாடினர்.

அதைத் தொடர்ந்து தாமாகவே முன்வருபவர்கள் மட்டுமே தேசிய சேவைத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

1970களில் இளையர்களிடையே ஆய்வு நடத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது குடிமைப் பண்பு பிரிவு.

ஆனால் 1980களில் பிரதமர் அலுவலகத்திற்குக் கீழ் மாறியதைத் தொடர்ந்து, அது அரசாங்கத்தின் கொள்கைப் பிரசாரத்திற்காய்ப் பயன்படுத்தப்படுவதாகச் சந்தேகங்கள் எழுந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்