Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா : COVID-19 பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான திட்டம் தயாராகிறது

மலேசியா : COVID-19 பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான திட்டம் தயாராகிறது

வாசிப்புநேரம் -
மலேசியா : COVID-19 பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான திட்டம் தயாராகிறது

(கோப்புப் படம்: REUTERS/Lim Huey Teng)

மலேசியா, COVID-19 நிலவரத்தில் இருந்து மீண்டு வருவதற்கான திட்டத்தைத் தமது நிர்வாகம் தயார் செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் கூறியுள்ளார்.

அந்தத் திட்டம் மக்களிடம் கட்டங்கட்டமாக அறிவிக்கப்படும் என்றார் அவர்.

COVID-19 நோயைத் துடைத்தொழித்து, மலேசியா பொருளியல் மீட்சிப் பாதையில் செல்லும் வழிகளைப் புதிய திட்டம் அமைத்துத்தரும்.

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்தபோது பிரதமர் முஹிதீன் யாசின் அரசாங்கத்தின் திட்டம் குறித்துப் பேசினார்.

நோய்ப்பரவலை எதிர்கொண்ட அனுபவத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள், அரசாங்கம் செய்துள்ள ஏற்பாடுகள் போன்றவற்றைக் கொண்டு திட்டம் வரையப்பட்டதாக அவர் சொன்னார்.

திட்டம் அடுத்த வாரத்துக்குள் தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

கோலாலம்பூரிலும் புத்ராஜெயாவிலும் மக்களுக்குக் கூட்டு எதிர்ப்பாற்றல் எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே, ஆகஸ்ட் மாதத்துக்குள் உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியாவில் கூடுதலான தடுப்பூசி நிலையங்களும் குடிமக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டங்களும் அமைக்கப்படுகின்றன.

அதனால் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வழியமைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் திரு. முஹிதீன் அவ்வாறு சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்