Images
  • yassin
    (கோப்புப் படம்: Bernama) 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மலேசியப் பிரதமர்- அவருடன் இருந்த அதிகாரிக்குக் கிருமித்தொற்று

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மலேசிய அமைச்சரவைச் சந்திப்புக்குப் பிறகு நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு COVID-19 கிருமித்தொற்று இருந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை திரு. முஹிதீனுக்கு கிருமித்தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் அவருக்கு கிருமித்தொற்று ஏதும் இல்லை என்று தெரிய வந்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

அமைச்சரவைச் சந்திப்பு கடந்த புதன்கிழமை நடந்தது.

சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகப்
பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

அமைச்சரவைச் சந்திப்பில் பாதுகாப்பு இடைவெளியும், சுகாதார நடவடிக்கைகளும் கடுமையாக பின்பற்றப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

 

Top