Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியப் பொருள்களை முதலில் வாங்குங்கள்: மலேசிய அமைச்சர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மலாய்க்காரர்கள் தயாரிக்கும் பொருள்களை மட்டுமில்லாமல் பொதுவாக மலேசியப் பொருள்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி மலேசியாவின் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசியப் பொருள்களை முதலில் வாங்குங்கள்: மலேசிய அமைச்சர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

(படம்: AFP/ MOHD RASFAN)

மலாய்க்காரர்கள் தயாரிக்கும் பொருள்களை மட்டுமில்லாமல் பொதுவாக மலேசியப் பொருள்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி மலேசியாவின் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் தயாரித்த பொருள்களுக்கு முன்னுரிமை வழங்க அண்மையில் இயக்கம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் சைஃபுதீன் அவ்வாறு தெரிவித்தார்.

'முஸ்லிம் பொருள்கள், மலாய்ப் பொருள்கள்' என்று கூறாமல்...மலேசியப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று நான் சொல்கிறேன்," என்று கூறினார் அமைச்சர்.

பூமிபுத்ராக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு ஆதரவளிக்கும் வேளையில், பிறர் தயாரிக்கும் பொருள்களைப் புறக்கணிக்கும்படியும் சில தரப்பினர் கேட்டுக்கொண்டனர்.

நேற்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது அந்த இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்