Images
  • kl
    (படம்:  Channel NewsAsia)

கோலாலம்பூரில் நள்ளிரவிலிருந்து காவல்துறை கண்காணிப்பு

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நாளை பேரணி நடக்கவிருக்கும் வேளையில் அந்நாட்டுக் காவல்துறையினர் அங்கு நடக்கும்
எல்லா நடவடிக்கைகளையும் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் கண்காணிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

எல்லா வகையான இனப்பாகுபாட்டையும் ஒழிக்கும் அனைத்துலக அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது அந்தப் பேரணியின் நோக்கம்.

அதற்கு சுமார் அரை மில்லியன் பேர் திரள்வர் என்று அரசியல் கட்சிகளான PASசும் அம்னோவும் எதிர்பார்க்கின்றன.

அனைத்துலக அறிக்கையை உறுதி செய்யவிருப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது இதற்குமுன் கூறியிருந்தார்.

ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வரும் மலாய்க்காரர்களின் சிறப்பு நிலை கீழறுக்கப்படும் எனும் குறைகூறலைத் தொடர்ந்து தம் எண்ணத்தை அவர் மாற்றிக்கொண்டார்.

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த அறிக்கையை அரசாங்கம் உறுதிப்படுத்தாததால் பேரணியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

அந்த அறிக்கையை உறுதிப்படுத்தாத 14 நாடுகளில் மலேசியாவும் ஒன்று. வடகொரியாவும் மியன்மாரும் அறிக்கையை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. 

Top