Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

' மலேசிய அரசாங்கம், ஆகஸ்ட் முதல் தேதிக்கு மேல் நெருக்கடி நிலையை நீட்டிக்காது '

மலேசிய அரசாங்கம், ஆகஸ்ட் முதல் தேதிக்கு மேல் COVID-19 நெருக்கடி நிலையை நீட்டிக்காது என அந்நாட்டின் சட்ட அமைச்சர் தாக்கியுதீன் ஹசான் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -

மலேசிய அரசாங்கம், ஆகஸ்ட் முதல் தேதிக்கு மேல் COVID-19 நெருக்கடி நிலையை நீட்டிக்காது என அந்நாட்டின் சட்ட அமைச்சர் தாக்கியுதீன் ஹசான் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து நெருக்கடி நிலை நடப்பில் உள்ளது.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த அது அவசியம் எனப் பிரதமர் முஹிதீன் யாசின் கூறியிருந்தார்.

நெருக்கடி நிலையை நீட்டிக்கும்படி மாமன்னரிடம் அரசாங்கம் கேட்டுக்கொள்ளாது எனத் திரு. தாக்கியுதீன் தெரிவித்தார்.

நெருக்கடி நிலை, முடக்கம் ஆகியவற்றுக்கு இடையிலும், மலேசியாவில் கிருமிப்பரவல் மோசமடைந்துள்ளதால் மக்களிடையே கண்டனங்கள் எழுந்துள்ளன.

நேற்றைய நிலவரப்படி அந்நாட்டில் மொத்தம் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிப்புற்றனர்.

ஆசிய வட்டாரத்தில் மக்கள்தொகையைக் கருத்தில் கொள்ளும்போது மலேசியாவின் கிருமித்தொற்று விகிதமே ஆக அதிகம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்