Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படலாம்

மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர்  லிம் குவான் எங் (Lim Eng Guan) மீதும், அவருடைய மனைவி மீதும் மேலும் சில குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

வாசிப்புநேரம் -
மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படலாம்

(கோப்புப் படம்: Reuters/Lim Huey Teng)

மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் (Lim Eng Guan) மீதும், அவருடைய மனைவி மீதும் மேலும் சில குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

மலேசிய ஊழல் ஒழிப்புத் துறையினர் சில மாதங்கள் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு சென்ற வாரம், திரு. Lim கைது செய்யப்பட்டார்.

பினாங்கு கடலடிச் சுரங்கத் திட்டம் தொடர்பில் ஒன்றரை பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாகத் திரு. Lim மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.

ஆதரவாளர்களிடமிருந்து திரட்டிய சுமார் 239,000 டாலரைச் செலுத்தி அவர் பிணையில் வெளிவந்துள்ளார்.

பிணைத்தொகையில் அது பாதி மட்டுமே. எஞ்சிய தொகையைத் திரு. லிம் இன்று செலுத்த வேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்